என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தங்கச் சுரங்கம்
நீங்கள் தேடியது "தங்கச் சுரங்கம்"
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானதில், சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #GoldMineCollapsed #MiningDisasters
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. #GoldMineCollapsed #MiningDisasters

சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழு உரிமை உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். #China #GoldMine
பீஜிங்:
இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.4 லட்சம் கோடி) தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.
இந்திய எல்லைப் பகுதி அருகே பெரும் அளவில் சுரங்கம் தோண்டு பணிகளில் சீனா ஈடுபட்டு வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார். #China #GoldMine

×

X